எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், கீழ்க்கண்ட விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்:
சஞ்சீவி ஆன்லைன் ஜோதிடம் வழங்கும் ஜாதகம், பொருத்தம் மற்றும் ராசி பலன்கள் அனைத்தும் பாரம்பரிய ஜோதிட கணித முறைகளின் அடிப்படையில் மென்பொருள் (Software) மூலம் உருவாக்கப்படுபவை. ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டுதலே தவிர, இதுவே அறுதியான அறிவியல் உண்மை அல்ல. எங்கள் அறிக்கைகளின் அடிப்படையில் நீங்கள் எடுக்கும் எந்தவொரு தனிப்பட்ட, நிதி அல்லது வாழ்க்கை முடிவுகளுக்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.
பயனர்கள் தங்களின் பிறந்த தேதி மற்றும் நேரத்தைச் சரியாக உள்ளிட வேண்டும். தவறான தகவல்களை அளித்துவிட்டு, அறிக்கை தவறாக உள்ளது என உரிமை கோர முடியாது.
நாங்கள் வழங்கும் குழந்தை பெயர், 2 பக்க அட்வான்ஸ் ஜாதகம் போன்றவை 'Digital PDF' வடிவில் உடனடியாக வழங்கப்படுவதால், பணம் செலுத்திய பின் கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெற முடியாது (No Refund). தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அறிக்கை கிடைக்கவில்லை எனில், எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த இணையதளத்தில் உள்ள குறியீடுகள், வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அனைத்தும் சஞ்சீவி ஆன்லைன் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதை நகலெடுப்பது சட்டப்படி குற்றமாகும்.